இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சிஸை ஆட தொடங்கியது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற முன்னிலைப் பெற்றுள்ளது.
ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குறிப்பாக ஜடேஜா தனது இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் பெரும் சாதனை படைத்துள்ளார்.
இரண்டாவது இன்னிங்சில் சதமடித்ததோடு, போட்டி முழுவதும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 1000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunalsports%2Fposts%2Fpfbid0XmzF1VmSxNmpdk41iKkhBgNbLSZQxwJJpDUmBTa13JV1Dgp6XecjFYPQ66eZWAi8l&show_text=true&width=500" width="500" height="635" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
கருத்துரையிடுக