இவர் அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து நீண்ட காலமாக கள்ள நோட்டு அச்சடித்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
காவலர்கள் வருவதைக் கண்ட வி.சி.க., நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காவலர்களில் சிலர் அவர்களை பிடிக்க முயன்றனர்.
இதனையடுத்து, அந்த கொட்டகையில் காவலர்கள் சோதனை செய்தபோது, ரூ.83,000 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், ஏர்கன் பிரிண்டிங் மிஷின், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் ஆகியவற்றை அங்கிருந்து பறிமுதல் செய்தனர்.
இதில் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை காவலர்கள் தேடி வருகின்றனர். இதனிடையே, செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கம் செய்து விடுதலைச் சிறுத்தை கட்சி உத்தரவிட்டுள்ளது.
கருத்துரையிடுக