நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான வீடியோ சர்ச்சை – ஏஐ மார்பிங் எனக் கருதப்படும் பதிலடி!

 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் வில்லி ரோகிணியின் தோழி வித்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதி நாராயணன் சமீபத்தில் எதிர்பாராத சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று பரவி, இது மார்பிங் செய்யப்பட்டதா? அல்லது காஸ்டிங் கவுச்சின் ஒரு நிகழ்வா? என்ற விவாதத்தை கிளப்பியது. இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் போன்ற வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து, ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை உடனே பிரைவேட்டாக மாற்றினார்.

இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் சீரியல் பார்வையாளர்கள் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால், இன்று ஸ்ருதி மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பொதுவாக மாற்றி, புதிய புடவை போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், தன்னைப்பற்றி பரவும் வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட இரண்டு பெண்கள் காட்டப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் உண்மையானவர், மற்றொருவர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், யார் உண்மையானவர், யார் ஏஐ உருவாக்கியது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இதன் மூலம், தன்னைப்பற்றி பரவிய அந்த வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பதைக் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி நாராயணனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பரவி வரும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்துள்ளார்.

0 கருத்துகள்

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை