ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் புதிய MLA அலுவலகம்.. கட்டிட பணிகளை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்!

 ரூ.1.07 கோடி  மதிப்பீட்டில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலகத்திற்கு கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்‌,மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் TKTமு.நாகராசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். 

தமிழ்நாடு அரசு பொதுப்பணிதுறை சார்பில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலகத்திற்கு,ரூ.1.07 கோடி  மதிப்பீட்டில் கட்டட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து  திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட மாநகர வார்டு எண் 36ல் உள்ள பார்க் ரோட்டில் கட்டிடம் கட்டும் பணியை தமிழ்நாடு அரசு பொதுப்பணிதுறை இன்று துவங்கியுள்ளது.இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்‌ இ.ஆ.ப.  அவர்களும் ,திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தெற்கு மாநகர கழக செயலாளர் TKTமு.நாகராசன் ஆகிய நானும் இணைந்து  மரக்கன்று நட்டு வைத்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில்  மத்திய மாவட்ட, மாநகர, பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


0 கருத்துகள்

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை